Monday, March 8, 2010

நாயுறுவி ------ அறிவியல் பெயர் -- achyranthes aspera


நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு ...... இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது.... இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு. நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது ..... அ ந்த வேளையில் இதன் விதைகள் முள்ளைப் போல் நயின் உடல் எங்கும் பற்றிக்கொண்டு விடும் .... இதுவே இம்மூலிகைக்கு இப்பெயர் ஏற்பட காரணமாகும்.

Sunday, March 7, 2010

குன்றிமணி - அறிவியல் பெயர் -Abrus precatorius


குன்றிமணி ஒரு வகை கொடியில் காய்க்கும் அழகிய விதைகளாகும்..... கருப்பும் சிவப்புமான பளப்ளப்பான இவ்விதைகள், வேர் மருத்துவகுணம் உடையவை.....
பழங்காலத்தில் குன்றிமணி விதைகள் தங்கத்தை அளவிடுவதற்குப் பயன்பட்டன. ஒரே கயினுள் இருக்கும் அனைத்து விதைகளும் ஒரே எடையுடன் இருப்பதே இதன் சிறப்பாகும்.